வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ரூ.2 ஆயிரம் கேட்டதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
வெட்டி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய புதுக்கோட்டை அரசு மருத்துவமனை ஊழியர்கள் ரூ.2 ஆயிரம் கேட்டதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாலிபர் வெட்டி கொலை
புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் தைலமர காடுகள் உள்ளது. இந்த தைலமரக்காடு கிழக்கு பகுதி, மேற்கு பகுதி என 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் தலா ஒரு வனவர் வனத்துறை சார்பில் நியமிக்கப்பட்டு, காலை மற்றும் மாலை வேளைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மேற்கு பகுதி வனவர் செந்தில்மணி தைலமரக்காட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சுமார் 30 வயதுள்ள வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து திருக்கோகர்ணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு தலைமையிலான திருக்கோகர்ணம் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடல் கிடந்த இடத்தில் இருந்த ஒரு செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் மதுரை மாவட்டம் பறவை கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் கனகராஜ் என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுதா என்பவருடன் திருமணம் நடைபெற்றதும் தெரியவந்தது.
பிரேத பரிசோதனை செய்ய ரூ.2 ஆயிரம்
இதைத்தொடர்ந்து போலீசார் கனகராஜின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கனகராஜை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கனகராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்ய தயார் நிலையில் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த கனகராஜின் மனைவி சுதா மற்றும் உறவினர்கள் நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் தான் கனகராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்வோம் எனக்கூறி காலை முதல் மதியம் வரை பிரேத பரிசோதனை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
உறவினர்கள் சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கனகராஜின் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கனகராஜின் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரேத பரிசோதனை செய்யும் இடத்திற்கு செல்லும் பாதையில் திரண்டு நின்றனர். இதைத்தொடர்ந்து கனகராஜின் உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.