சசிகலாவுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செந்தில் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
புதுடெல்லி,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்பதை தடுக்க வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செந்தில் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜரானார்.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி விட்ட இந்த சூழலில் இந்த மனு காலாவதியாகிவிட்டதாக கூறி தள்ளுபடி செய்தனர். மேலும் மனுவில் கூறப்பட்டது போல குற்ற பின்னணி கொண்டவர்கள் எம்.எல்.ஏ.வாக இல்லாமல் போனாலும் 6 மாதங்கள் வரை முதல்-அமைச்சராகவோ, அமைச்சராகவோ பதவி ஏற்கும் சம்பவம் நிகழவில்லை என்றும், அப்படி நிகழும் போது கோர்ட்டை அணுகலாம் என்றும் தெரிவித்தனர்.