ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை
களியக்காவிளை அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் கல்லூரி மாணவர் என்றும், அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
வாலிபர் பிணம்
குமரி மாவட்டம் குழித்துறை ரெயில் நிலையத்துக்கும் பாறசாலை ரெயில் நிலையத்துக்கும் இடையே களியக்காவிளையை அடுத்த குருமத்தூர் ரெயில்வே கேட் அருகே ஒரு வாலிபர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான், ஏட்டு சாம் ஆலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது வாலிபர் பற்றிய பரபரப்பு தகவல்கள் தெரிய வந்தன. அதன் விவரம் வருமாறு:-
கல்லூரி மாணவர்
ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அருமனை அருகே கும்பக்கோடை அடுத்த வாத்திக்கோணத்தைச் சேர்ந்த பிரதீப் (வயது 19) என்பதும், அவர் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. அவருடைய தந்தை ஜான்சன் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.
பிரதீப், கல்லூரியின் செமஸ்டர் தேர்வுகளில் சில பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் அவருடைய பெற்றோர், நன்றாக படிக்கச்சொல்லி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு செல்வதாகக்கூறி விட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இந்தநிலையில்தான் நேற்று முன்தினம் இரவு களியக்காவிளை அருகே ரெயிலில் அடிபட்ட நிலையில் பிரதீப் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
தற்கொலை
மேலும் இவர் குருமத்தூர் ரெயில்வே கேட் பகுதியில் இருந்தவர்களிடம் இந்த வழியாக எப்போது ரெயில் வரும் என்று விசாரித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். எனவே பிரதீப் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த பயணிகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
அவர் தற்கொலை செய்வதற்கு முன் அந்தப்பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிளை ரெயில்வே கேட் அருகே நிறுத்திவிட்டு தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளார். அந்த மோட்டார் சைக்கிளை பிரதீப் உறவினர்கள் போலீசாரிடம் அடையாளம் காட்டினர்.
நேற்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரதீப் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்