பெங்களூருவில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி உள்பட 4 பேரின் வீடுகளில் நகைகள், பணம் திருட்டு புதிதாக வாங்கிய டி.வி.யையும் மர்மநபர்கள் தூக்கிச் சென்றனர்
பெங்களூருவில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி உள்பட 4 பேரின் வீடுகளில் நகைகள், பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டார்கள்.;
பெங்களூரு,
பெங்களூருவில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி உள்பட 4 பேரின் வீடுகளில் நகைகள், பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டார்கள். புதிதாக வாங்கிய டி.வி.யையும் மர்மநபர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
ஓய்வுபெற்ற அரசு அதிகாரிபெங்களூரு அன்னபூர்னேஷ்வரிநகர் காந்திபார்க் பகுதியில் வசித்து வருபவர் அனுமந்த ராயப்பா, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பல்லாரிக்கு புறப்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அனுமந்த ராயப்பாவின் வீட்டுக்கதவை உடைத்து பீரோவில் இருந்த நகைகள், பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டார்கள். அனுமந்த ராயப்பா பல்லாரியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பிய பின்புதான் திருட்டுப்போன நகைகள், பணத்தின் மதிப்பு தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுபோல, சோழதேவனஹள்ளி அருகே அனுமந்தப்பா லே–அவுட்டை சேர்ந்தவர் வீனா. இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலையில் வீனா வேலைக்கு புறப்பட்டு சென்றார். வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு திரும்பிய வீனா முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் மர்மநபர்களால் திருடப்பட்டு இருந்தது.
புதிதாக வாங்கிய டி.வி. திருட்டுஇதுபோன்று, சி.கே.அச்சுக்கட்டு 2–வது கிராசில் வசிப்பவர் விஜயராஜ். இவர், தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் விஜயராஜ் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரூ.4.80 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பணம், பொருட்களை திருடி சென்று விட்டார்கள்.
இதுபோல், சந்திரா லே–அவுட் அருகே நாகரபாவி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஹேமந்த். இவர், 2 நாட்களுக்கு முன்பு தான் புதிதாக எல்.இ.டி. டி.வி.யை வாங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஹேமந்த் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் டி.வி. மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்று விட்டனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இந்த சம்பவங்கள் குறித்து அன்னபூர்னேஷ்வரிநகர், சோழதேவனஹள்ளி, சி.கே.அச்சுக்கட்டு மற்றும் சந்திரா லே–அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.