கிராமப்புறங்களும் கணினி மயமாக்கப்பட வேண்டும் கிரண்பெடி பேச்சு
ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் கணினி துறை சார்பாக கருத்தரங்கு நடந்தது.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் கணினி துறை சார்பாக கருத்தரங்கு நடந்தது. இணையதள குற்றங்கள் மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியா கணினிமயமாகி வருகிறது. நகரத்துக்கு இணையாக கிராமப்புறங்களும் முழுமையாக கணினி மயமாக்கப்பட வேண்டும். இந்த வளர்ச்சி காரணமாக இணையதள குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இணையதள சார்ந்த குற்றங்கள் சர்வதேச அளவில் நடப்பதினால் மத்திய அரசு அதற்கு இணையான சட்டங்களை கடுமையாக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளை போன்று கணினி தகவல் பாதுகாப்பு முறை நம் நாட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் பன்னாட்டு கணினி துறை அறிஞர்கள், திரு வள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந் தரவல்லி மற்றும் கல்லூரி பேரா சிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.