ஆர்.குண்ணத்தூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்
போளூரை அடுத்த ஆர்.குண்ணத்தூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜஜேஸ்வரி தலைமை தாங்கினார்.
போளூர்,
போளூரை அடுத்த ஆர்.குண்ணத்தூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜஜேஸ்வரி தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் வைதேகி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் தமிழரசி வரவேற்றார்.
முகாமில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் அமலா, ஜோதிமுருகன், சசிகுமார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.