சொகுசு விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி
சொகுசு விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை ஆஜர்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை,

சொகுசுவிடுதியில் எம்.எல்.ஏ.க்கள்
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் இளவரசன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரனை காணவில்லை. அவரையும், 130 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் சட்டவிரோதமாக கூவத்தூர் சொகுசு விடுதியில் பிடித்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த தமிழக டி.ஜி.பி. உள்ளிட்ட போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அதேபோல, கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி அவரது உறவினரான வக்கீல் பிரீத்தி ஒரு ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
மனுக்கள் தள்ளுபடி
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.ஜெயசந்திரன், டி.மதிவாணன் ஆகியோர் முன்பு 13-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கூவத்தூர், பூந்தண்டலம் ஆகிய கிராமங்களில் உள்ள சொகுசு விடுதிகளில் 119 எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, தங்களை யாரும் சட்டவிரோதமாக பிடித்து வைக்கவில்லை என்றனர். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில், ‘இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி, இதுபோன்ற ஆட்கொணர்வு மனுக்களை வக்கீல்கள் தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று முடிவு செய்து மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.