வெளிமாநிலத்தில் பதிவு செய்த சொகுசு காரை மும்பையில் ஓட்டிய நடிகருக்கு ரூ.5¼ லட்சம் அபராதம் எந்திரன் படத்தில் வில்லனாக நடித்தவர்

வெளிமாநிலத்தில் பதிவு செய்த சொகுசு காரை மும்பையில் ஓட்டிய எந்திரன் பட வில்லன் நடிகருக்கு ரூ.5¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-02-16 22:30 GMT

மும்பை,

வெளிமாநிலத்தில் பதிவு செய்த சொகுசு காரை மும்பையில் ஓட்டிய எந்திரன் பட வில்லன் நடிகருக்கு ரூ.5¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநில கார்

நாட்டிலேயே மும்பையில் சாலை வரி அதிகமாகும். இங்கு புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு 20 சதவீதம் சாலை வரி விதிக்கப்படுகிறது.

எனவே பலர் சாலை வரி 2 முதல் 2½ சதவீதம் மட்டும் விதிக்கப்படும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் அல்லது புதுச்சேரி, டையு–டாமன் போன்ற யூனியன் பிரதேசங்களில் விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கி மும்பையில் பயன்படுத்தி வருகின்றனர். இது சட்டவிரோதம் ஆகும்.

451 கார்கள் பறிமுதல்

இதனால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் ஓட்டப்பட்டு வரும் விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் சட்டவிரோதமாக ஓட்டப்பட்டு வந்த 451 சொகுசு வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கார்கள் சுமார் ரூ.10 கோடி வரி ஏய்ப்பு செய்து வாங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

நடிகருக்கு அபராதம்

பிடிபட்டதில் பிரபல நடிகர் டேனியின் ரேஞ்ச் ரோவர் காரும் அடங்கும். அவரிடம் அதிகாரிகள் சாலை வரியுடன் அபராதம் ரூ.5¼ லட்சம் சேர்த்து ரூ.29½ லட்சத்தை வசூல் செய்தனர். பின்னர் கார் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழிலில் வெளியான எந்திரன் படத்தில் டேனி, ரஜினிகாந்த் ரோபோவை உருவாக்கும் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்