நாகூர் பகுதியில் மது கடத்த பயன்படுத்திய கார், ஆட்டோ பறிமுதல் 2 பேர் சிக்கினர்
நாகூர் பகுதியில் மது கடத்த பயன்படுத்திய கார் மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்,
வாகனசோதனை
நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலை நாகூர் வெட்டாற்று பாலம் அருகே வாகனசோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை வாஞ்சூரில் இருந்து நாகை நோக்கி வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் மதுபாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து நாகூர் போலீசார் காரை ஓட்டிவந்தவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமூர்த்திநகர் பகுதியை சேர்ந்த ஜெயராஜன் (வயது 48) என்பவர் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜனை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல வாஞ்சூர் சோதனைசாவடி அருகே நாகூர் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அதில் 110 லிட்டர் வெளிமாநில சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை ஓட்டிவந்த நாகை தாமரைகுளம், மேல்கரைபகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி (38) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆட்டோ மற்றும் வெளிமாநில சாராயத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.