கல்லூரி தாளாளர் கொலை வழக்கில் கோர்ட்டில் ஒருவர் சரண்

கல்லூரி தாளாளர் கொலை வழக்கில் கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.

Update: 2017-02-16 21:26 GMT
காஞ்சீபுரம்,

கல்லூரி தாளாளர் கொலை வழக்கில் கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.

கொலை

வேலூரில் உள்ள ஜி.ஜி.ஆர். கல்லூரியின் தாளாளரும், அ.தி.மு.க. பிரமுகருமானவர் ஜி.ஜி.ரவி (வயது 54). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்பாடியில் அவரது உறவினர் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

சிறையில் அடைப்பு

இந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டு எண் 2-ல் வேலூர் தோல் மண்டித்தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்கிற பாலா (27) சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சுதா உத்தரவிட்டார்.

இதையொட்டி போலீஸ் பாதுகாப்புடன் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்