காயரம்பேடு கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு வீனஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 30).

Update: 2017-02-16 21:25 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு வீனஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 30). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் அமுதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்