சுங்கச்சாவடி அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் சுங்கச் சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2017-02-16 21:24 GMT
ராஜபாளையம்,

ஓட்டுனர்கள்

ராஜபாளையம் சி.ஐ.டி.யு. வாடகை கார், வேன் ஓட்டுனர் சங்கத்தின் 41-வது ஆண்டு பேரவை கூட்டம் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கண்ணன் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் அய்யப்பன் வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் தேவா, சாலை போக்குவரத்து பிரிவு மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசு வாகன ஓட்டுனர் பதிவு கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும், திருமங்கலம் சுங்கச்சாவடி விதிமுறையை ஒழுங்குபடுத்த வேண்டும், ராஜபாளையம் நகர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதோடு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும், சாலை பாதுகாப்பு மசோதாவையும் வாகன இன்சூரன்ஸ் பிரீமிய உயர்வையும் ரத்து செய்ய வேண்டும்.

சுங்கச்சாவடி

மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு 5 வருடத்திற்கு குத்தகைக்கு விட்டு ராஜபாளையம் மற்றும் சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க முயற்சி செய்வதை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க துணைத் தலைவர் குமரகுருபரன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்