செல்போன் கோபுரத்தில் வயரை திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி

வேப்பனப்பள்ளி அருகே செல்போன் கோபுரத்தில் வயரை திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி போலீசிடம் ஒப்படைப்பு

Update: 2017-02-16 21:23 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது காரகுப்பம் கிராமம். இந்த பகுதியில் ஒரு செல்போன் கோபுரம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அந்த செல்போன் கோபுரத்தில் 2 பேர் ஏறி கேபிள் வயரை திருடிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். பொதுமக்களை கண்டதும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் மட்டும் பிடிபட்டார். அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். விசாரணையில் பிடிபட்டவர் திருப்பத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது 30) என தெரியவந்தது. பின்னர் அந்த வாலிபரை வேப்பனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்