புதுவை மின்துறை டிப்ளமோ என்ஜினீயர்கள் உண்ணாவிரதம்

புதுவை மின்துறை டிப்ளமோ என்ஜினீயர்கள் உண்ணாவிரதம்

Update: 2017-02-16 21:23 GMT
புதுச்சேரி,

புதுவை மின்துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள சோதனையாளர் பதவிகளை நிரப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி மின்துறை டிப்ளமோ என்ஜினீயர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மின்துறை தலைமை அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள்.

உண்ணாவிரதத்துக்கு சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் பரசுராமன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் லட்சுமணசாமி வாழ்த்திப் பேசினார். உண்ணாவிரதத்தில் நிர்வாகிகள் மணிகண்டன், வெங்கடசுப்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்