திருவள்ளூர் நகராட்சி பகுதியில் திரிந்த 20 பன்றிகள் பிடித்து அகற்றம்

திருவள்ளூர் நகராட்சி பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் பன்றிகளை வளர்க்கக்கூடாது என நகராட்சியினர் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்திருந்தனர்.

Update: 2017-02-16 20:21 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சி பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் பன்றிகளை வளர்க்கக்கூடாது என நகராட்சியினர் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்திருந்தனர். இருப்பினும் சிலர் எம்.ஜி.ஆர். நகர், வரதராஜ்நகர், பெரும்பாக்கம் மற்றும் சில இடங்களில் பன்றிகளை வளர்த்து வருவதாகவும் அவற்றால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் நகராட்சியினர் எம்.ஜி.ஆர். நகர் , வரதராஜ் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் பன்றிகள் வளர்க்கப்படுகிறதா? என்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதிகளில் சுற்றி திரிந்த 20 பன்றிகளை நகராட்சியினர் பிடித்து அகற்றினார்கள்.

மேலும் திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் பன்றிகளை வளர்ப்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு பன்றிகளை பிடித்து அகற்றப்படும் என நகராட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்