பராமரிப்பு பணி நிறைவு: கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து கூடங்குளம் முதலாவது அணு உலையில் நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

Update: 2017-02-16 20:00 GMT

நெல்லை,

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து கூடங்குளம் முதலாவது அணு உலையில் நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

மீண்டும் மின்உற்பத்தி

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் இயங்கி வந்தன. இதில் முதலாவது அணு உலை பராமரிப்பு பணிக்காக கடந்த நவம்பர் 24–ந்தேதி மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.

சரியாக காலை 7.41 மணிக்கு மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. முதலில் 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக இது உயர்ந்து நேற்று மாலை 450 மெகாவாட் என்ற அளவில் மின் உற்பத்தி நடைபெற்றது. இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான 1,000 மெகாவாட் மின்உற்பத்தியை முதலாவது அணு உலை எட்டும் என்று அணுமின் நிலைய அதிகாரிகள் கூறினார்கள்.

தமிழகத்துக்கு 1,050 மெகாவாட் மின்சாரம்

கூடங்குளம் 2–வது அணு உலையில் தற்போது 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த முதலாவது அணு உலையும் இயங்கத் தொடங்கி விரைவில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டினால், ஒட்டுமொத்தமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 2,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்புக்கு வழங்கப்படும்.

அதில் தமிழகத்திற்கு 1,050 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்