சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
சோலூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சுமார் 700–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே சோலூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சுமார் 700–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு நிர்வாகம் கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்றும், மேலும் ஆட்கள் குறைப்பு, தொழிற்சாலையை மூடுவது உள்ளிட்ட பணிகளை நிர்வாகம் மறைமுகமாக செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து தொழிலாளர்கள், நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தோல் மற்றும் தோல்பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்க தலைவர் சுகுந்தன் தலைமையில் ஆம்பூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், உடனடியாக சம்பளம் வழங்ககோரியும், ஆட்கள் குறைப்பை கைவிடாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.