கார் திருட்டில் ஈடுபட்டு வந்த மெக்கானிக், 3 கல்லூரி மாணவர்கள் கைது

கார் திருட்டில் ஈடுபட்டு வந்த மெக்கானிக், 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-02-15 22:45 GMT

மும்பை,

கார் திருட்டில் ஈடுபட்டு வந்த மெக்கானிக், 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரி மாணவர்கள்

மும்பை காலாசவுக்கி பகுதியில் உள்ள மெக்கானிக் ஷெட்டில் இருந்து ஒரு டெம்போவில் கார் உதிரி பாகங்களை 3 பேர் ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பைகுல்லா பகுதியை சேர்ந்தவர் பங்கஜ்(வயது21). இவர் சிவ்ரியில் மெக்கானிக் ஷெட் நடத்தி வந்தார். அவர் தன்னிடம் வரும் வாகனங்களை திருட்டு வாகனங்களில் இருந்து கிடைக்கும் உதிரி பாகங்களை பயன்படுத்தி பழுது பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு கல்லூரி மாணவர்களான மஜ்காவை சேர்ந்த சுஜை, சந்தேஜ், பைகுல்லாவை சேர்ந்த ஜெயேஷ்(19) ஆகியோரின் பழக்கம் ஏற்பட்டது.

ஆசை வார்த்தை

பங்கஜ், ரோட்டில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை திருடி அதன் உதிரிபாகங்களை விற்று அதிக பணம் சம்பாதிக்கலாம் என கல்லூரி மாணவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 3 பேரும் பங்கஜூடன் சேர்ந்து இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை திருடி வந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் 2 கார்கள் மற்றும் 2 வாகனங்களின் உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்