எம்.எல்.ஏ.க்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற திட்டமா? ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் பதில்

கூவத்தூர் சொகுசு விடுதியில், சோதனையின் போது வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2017-02-15 22:06 GMT
சென்னை,

கூவத்தூர் சொகுசு விடுதியில், சோதனையின் போது வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: எம்.எல்.ஏ.க்களை கட்டாயப்படுத்தி நீங்கள் வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?

பதில்: அப்படி எந்த ஒரு திட்டமும் நாங்கள் வகுக்கவில்லை.

கேள்வி: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: விசாரணை நடந்து வருகிறது.

கேள்வி: முதல்-அமைச்சரின் நிர்பந்தத்தால் தான் நீங்கள் சோதனை செய்வதாக புகார்கள் வருகிறதே?

பதில்: அப்படி எந்த ஒரு புகாரும் எங்களுக்கு வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்