ரெயிலில் முன்பதிவில்லா இருக்கைகள் ரூ.50-க்கு விற்பனை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒருவர் சிக்கினார்
சென்னை ரெயில் நிலையங்களில் முன்பதிவில்லா இருக்கைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது.
சென்னை,
சென்னை ரெயில் நிலையங்களில் முன்பதிவில்லா இருக்கைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லா இருக்கைகளை ரூ.50-க்கு விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
முன்பதிவில்லா இருக்கைகள் விற்பனை
வெளியூர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் முன்பதிவு செய்யப்படாத சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வார்கள். இதனால் எப்போதும் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் எல்லா ரெயில்களிலும் முன்பதிவில்லா சாதாரண பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
வரிசைப்படி அனுமதி
இதைத்தொடர்ந்து பயணிகள் வசதிக்காக சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக பயணிகளை ரெயில்வே போலீசார் வரிசைப்படுத்தி அனுப்புவார்கள்.
இந்த ரெயில்களில் முன்பதில்லா பெட்டிகளில் இடம் பிடித்து கொடுக்க ஒரு கும்பல் இருக்கைக்கு ரூ.50 கமிஷன் பெறுகிறார்கள். அதாவது பயணம் செய்யும் பயணிக்கு பதிலாக அவர்கள் ஒருவரை வரிசையில் நிற்க வைத்து ஒரு இருக்கையை ஆக்கிரமித்து கொடுத்து பயணியை உட்கார வைப்பதற்கு கூலியாக இந்த கமிஷனை பெறும் நிலை ரெயில் நிலையங்களில் அதிகரித்து உள்ளது.
இதுதொடர்பாக ரெயில்வே துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதனை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்டிரலில் ஒருவர் சிக்கினார்
முன்பதிவில்லா ரெயில் இருக்கைகளை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.50-க்கு விற்பனை செய்த ஒருவரை ரெயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை சென்டிரலில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலின் (வண்டி எண்: 12679), முன்பதிவில்லா பெட்டிகளின் இருக்கையை ரூ.50-க்கு சட்ட விரோதமாக விற்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்திய ரெயில்வே சட்டம்-1989-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
கடும் நடவடிக்கை
மேலும் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் இனிமேல் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே எச்சரித்துள்ளது.
இதுபோன்று நடைபெறும் சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க பொது மக்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- தெற்கு ரெயில்வே அலுவலகம் - 044 25354405, சென்னை - 044 25354457, மதுரை - 0452 2308250, சேலம் - 0427 2431010, திருச்சி - 0431 2418992, பாலக்காடு - 0491 2552755, திருவனந்தபுரம் - 0471 2326484, ரெயில்வே பாதுகாப்பு படை - 182 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.