போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க தபால் நிலையங்களில் இளைஞர்கள்– இளம்பெண்கள் கூட்டம் அலைமோதல்

நாகர்கோவில்,
காவல்துறையில் காலியாக உள்ள போலீசாருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தபால் நிலையங்கள் மூலம் கடந்த மாதம் 23–ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், தக்கலை தலைமை தபால் நிலையம், கன்னியாகுமரி, பூதப்பாண்டி, நெய்யூர், குழித்துறை ஆகிய தபால் நிலயங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.30 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் நிலையங்களிலேயே தேர்வுக்கான கட்டணமாக ரூ.135–ம், விரைவு தபால் மூலம் அனுப்ப ரூ.40–ம் என மொத்தம் ரூ.175 செலுத்தி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வினியோகத்துக்கான கடைசி நாளும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விரைவுத்தபால் மூலம் அனுப்பி வைப்பதற்கான கடைசிநாளும் வருகிற 22–ந் தேதியாகும். இதனால் தபால் நிலையங்களில் விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவும், இளைஞர்கள்–இளம்பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.
குமரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28,600 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் மூலம் மட்டும் நேற்று வரை 11,200 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று தபால்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.