ஆம்பூர் அருகே குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்

ஆம்பூர் அருகே குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்

Update: 2017-02-15 22:45 GMT
ஆம்பூர்,

ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம் கிராமத்தில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் நேற்று சாலை விரிவாக்கப் பணி நடந்தது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் மண் வெட்டி எடுத்த போது காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலை வரிவாக்கப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 8 மணி வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து குடிநீர் வீணாகாமல் இருக்க வால்வு மூடி குடிநீர் நிறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்