துணைவேந்தர் அலுவலகம் முன் தேசிய கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் அலுவலகம் முன் தேசிய கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்
மாத்தூர்,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இந்த நிலையில் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட திருச்சி தேசிய கல்லூரியில் உடற்கல்வித்துறைக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை கண்டித்து அந்த துறையை சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் நேற்று காலையில் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். பின்னர் துணைவேந்தர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடற்கல்வித்துறைக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் போட்டனர். இந்த போராட்டத்தால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.