பெரம்பலூர்,
பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகம் (தாட்கோ) சார்பில் தொழில் முனைவோருக்கான 6 நாள் பயிற்சி முகாம் பெரம்பலூர் சங்குப்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு மையத்தில் தொடங்கியது. இதில் கிராமிய சுயவேலை வாய்ப்பு மைய இயக்குனரும் (பொறுப்பு), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருமான அருள்தாசன், தாட்கோ மேலாளர் வெங்கடேசன், நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் தொழில் முனைவோருக்கான நல்ல பண்புகள் பற்றியும், தொழிலை லாபகரமானதாக மாற்றுவதற்கான நுணுக்கங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பணம் இல்லா பரிவர்த்தனை முறைகள் குறித்தும், தொழில் முனைவோர் அவசியம் பின்பற்ற வேண்டிய நேர மேலாண்மை, பணத்தை எவ்வாறு முறையாக செலவு செய்வது, வரவு-செலவுகளை எவ்வாறு முறையாக கையாள்வது, உற்பத்தி பொருட்களை எவ்வாறு சந்தைப்படுவது என்பது குறித்தும் இந்த பயிற்சி முகாமில் விரிவாகவும், தெளிவாகவும் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களால் எடுத்துரைக்கப்பட உள்ளது. முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் பயிற்சி குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன.