ரெயிலில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ரெயிலில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-02-15 23:00 GMT
மயிலாடுதுறை,

சோதனை

திருச்சி கோட்ட ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா உத்தரவின்பேரில் மயிலாடுதுறை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தினகரன் தலைமையில் போலீஸ் ஏட்டுகள் ஆதிமூலம், பாலசுப்பிரமணியன், திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மாலை மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த பயணிகள் ரெயிலில் உள்ள பெட்டிகளில் சோதனையிட்டனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

அதில் 10 மூட்டைகளில் மொத்தம் 200 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியை மர்மநபர்கள் விட்டு சென்றது தெரியவந்தது. உடனே போலீசார், ரெயிலில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலர் சாந்தியிடம் ஒப்படைத்தனர். அதனை வட்ட வழங்கல் அலுவலர், மயிலாடுதுறை சித்தர் காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 

மேலும் செய்திகள்