தர்மபுரியில் தனியார் பஸ் மோதி கணவன்-மனைவி பலி

தர்மபுரியில் தனியார் பஸ் மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-02-15 21:32 GMT
தர்மபுரி,

தனியார் பஸ் மோதியது

தர்மபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 50). இவருடைய மனைவி வெண்ணிலா(46). இவர்கள் 2 பேரும் சோலைக்கொட்டாய் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று சென்றனர். பின்னர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தர்மபுரிக்கு வந்துகொண்டிருந்தனர். இவர்களுடன் உறவினர் மணிகண்டன் என்பவரும் மோட்டார் சைக்கிளில்வந்தார்.

இவர்கள் மதிகோன் பாளையம் பாலம் அருகே வந்தபோது பின்னால் வந்த ஒரு தனியார் பஸ், கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

கணவன்-மனைவி பலி

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கிருஷ்ணன், வெண்ணிலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்