ஓசூரில் வெவ்வேறு சம்பவத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் தற்கொலை

ஓசூரில் வெவ்வேறு சம்பவத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2017-02-15 21:32 GMT
ஓசூர்,

தற்கொலை

ஓசூர் தாலுகா அலுவலக சாலை தாசர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் நோய் குணமடையவில்லை.

இதனால் மனம் உடைந்த முருகேசன் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கஜலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கூலித்தொழிலாளி

இதே போல ஓசூர் சின்ன எலசகிரி லட்சுமய்யா காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(35). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்