சேலத்தில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சூரமங்கலம்,
சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் சேலம் சூரமங்கலம் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். சாலையோர வியாபாரிகளின் கடைகளை தொடர்ந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் கைவிட வேண்டும், வியாபாரிகளை அதிகாரிகள் தரக்குறைவாக பேசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் உதயகுமார், மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, உதவி தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.