ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும்
ஊத்துக்்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்குன்றம்,

தரைப்பாலம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடும் தண்ணீர் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் வாகன போக்குவரத்து அடியோடு ரத்து செய்யபடும். இதை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1937-ம் ஆண்டு தரைப்பாலம் அமைத்தனர்.
இந்த தரைப்பாலத்தை கடந்துதான் தற்போது திருவள்ளூர், பூந்தமல்லி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் 2 மாத காலம் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
விரைவில் மேம்பாலம்
இதனை கருத்தில் கொண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை வாழ் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இங்கு மேம்பாலம் அமைக்க சாத்திய கூறுகள் பற்றி ஆராய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இங்கு மண் மற்றும் இதர பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேம்பாலம் அமைக்க ஏதுவாக அறிக்கை அளித்தனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது:-
ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உடனடியாக டெண்டர் விடப்பட்டு விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.