விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்
அரியலூரில் நந்தினி படுகொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், நந்தினி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்முத்து தலைமை தாங்கினார். மண்டல அமைப்பு செயலாளர் வளவன் வாசுதேவன் கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.