ஈரோட்டில் போராட்டம்

7–வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர்களுக்கு பாதகமான பிரிவுகளை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தபால் துறை ஓய்வூதியர்கள் கோரிக்கை குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். –––––––––

Update: 2017-02-15 22:00 GMT
* அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம், அகில இந்திய பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பி.சின்னசாமி தலைமை தாங்கினார். அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க கோட்ட செயலாளர் என்.ராமசாமி முன்னிலை வகித்தார்.

7-வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர்களுக்கு பாதகமான பிரிவுகளை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தபால் துறை ஓய்வூதியர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

* விவசாயிகள் சங்கம் சார்பில் ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர் செல்வராசு தலைமை தாங்கினார். தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பொன்னையன், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டக்கூடாது. காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனைசெல்வம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

* பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கண்ணுச்சாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் என்.சண்முகவேல், செயலாளர் கே.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அகில இந்திய துணை பொதுச்செயலாளர் சி.பழனிச்சாமி, மாநில செயலாளர் சி.வினோத்குமார் ஆகியோர் பேசினார்கள்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமநிலை வேலை, சமநிலை ஊதியம் வழங்கவேண்டும். அரசு அறிவித்த உயர் ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர் மணியன், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்