நாகையில் 50 ரூபாய் கள்ள நோட்டுகள் புழங்கியதாக பரபரப்பு
நாகையில் 50 ரூபாய் கள்ள நோட்டுகள் புழங்கியதாக பரபரப்பு ஏற்பட்டது. அதனை சோதனை செய்த அதிகாரிகள் அது 2005-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நோட்டுகள் என்று உறுதியளித்தனர்.
நாகப்பட்டினம்,
கள்ள நோட்டுகள்
நாகை பெருமாள் கோவில் தாண்டவராய பிள்ளை தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது31). பிரிட்ஜ் மெக்கானிக். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நாகூர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருக்கு பழைய பிரிட்ஜை விலைக்கு கொடுத்துள்ளார். அதற்கான தொகையை கொடுப்பதற்காக நேற்றுமுன்தினம் செந்தில் வெங்கட்ராமனுக்கு போன் செய்துள்ளார். அதைதொடர்ந்து வெங்கட்ராமன் நாகூரில் உள்ள செந்திலின் வீட்டிற்கு சென்று பிரிட்ஜிக்கான தொகை ரூ.4 ஆயிரத்தை பெற்று கொண்டு வந்துள்ளார். செந்தில் கொடுத்தது அனைத்தும் 50 ரூபாய் நோட்டுகள். இதற்கிடையே வெங்கட்ராமனின் மனைவி அனிதா ஏற்கனவே ஆன்லைன் மூலம் புக் செய்திருந்த பொருள் வந்துவிட்டதாகவும், அதனை உரிய பணம் செலுத்தி பெற்று கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட ஆன்லைன் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. அதையடுத்து அந்த அலுவலகத்திற்கு சென்ற வெங்கட்ராமன், செந்திலிடம் இருந்து வாங்கி வந்த பணத்தில் ரூ.2 ஆயிரத்து 400-ஐ கட்டிவிட்டு பொருளை வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் ஆன்லைன் அலுவலகத்தில் இருந்து போன் வந்துள்ளது. போனில் பேசிய ஆன்லைன் அலுவலக ஊழியர், வெங்கட்ராமனிடம் தாங்கள் கொடுத்த 50 ரூபாய் நோட்டுகளில் 43 நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்று கூறியுள்ளார்.
2005-ல் வெளியிடப்பட்டது
உடனே அந்த அலுவலகத்திற்கு சென்ற வெங்கட்ராமன் அந்த நோட்டுகளை பெற்று அதற்கான எந்திரத்தில் சோதனை செய்துள்ளார். அப்போது அந்த எந்திரத்தில் பீப் சப்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கட்ராமன், உடனே செந்திலுக்கு போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு செந்தில், தனது மனைவி சுய உதவிக்குழுவில் இருந்து கடன் பெற்று வந்த பணம் தான் அது என்று தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த நாகை உதவி கலெக்டர் கண்ணன், நாகை டவுன் போலீசார் வெங்கட்ராமன் வீட்டிற்கு சென்று அவரிடம் இருந்த 50 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு சோதனைக்கு எடுத்து சென்றனர். இதையடுத்து நேற்று அந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் சோதனை செய்ததில், அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கடந்த 2005-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நோட்டுகள் என்பதும், அது கள்ள நோட்டுகள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இந்த 50 ரூபாய் கள்ள நோட்டுகள் குறித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.