2 வாலிபர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாலேஒன்னூர் போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் போராட்டம்
2 வாலிபர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாலேஒன்னூர் போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு,

தாக்குதல்
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர் பகுதியை சேர்ந்தவர் சுரக்ஷா (வயது 24). அதேப்பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(22). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுரக்ஷாவும், ஜெகதீசும் அந்தப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மதுஅருந்தி கொண்டு இருந்ததாக தெரிகிறது.
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட பாலேஒன்னூர் போலீசார், சுரக்ஷாவையும், ஜெகதீசையும் சாலையில் அமர்ந்து மது அருந்தியதாக கூறி அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவர்களை எச்சரித்து அதன்பின் போலீசார் வீட்டிற்கு அனுப்பியதாக தெரிகிறது.
போராட்டம்
சுரக்ஷா, ஜெகதீசை போலீசார் அடித்தது குறித்து அறிந்த அவர்களது உறவினர்களும், கிராம மக்களும் நேற்று முன்தினம் காலை பாலேஒன்னூர் போலீஸ் நிலையத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சுரக்ஷா, ஜெகதீசை தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, போராட்டம் நடத்தியவர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னை தனது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு அவர்களிடம் கூறினார். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சிக்கமகளூருவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர். அங்கு போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலையை சந்தித்து பேசினர்.
மனு
அப்போது அவர்கள் ஒரு கோரிக்கை மனுவை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலையிடம் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பாலேஒன்னூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசார் அராஜகம் செய்து வருகின்றனர். சாலையில் அமர்ந்து மது அருந்தியதாக கூறி சுரக்ஷா, ஜெகதீஷ் ஆகியோரை பாலேஒன்னூர் போலீசார் தாக்குதல் நடத்தி உள்ளனர். அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாலேஒன்னூர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும். மேலும் பாலேஒன்னூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் கிரீசும் பொதுமக்களை அவதூறாக பேசி வருகிறார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பரபரப்பு
அந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலையும், இதுகுறித்து இன்னும் 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து சுரக்ஷா, ஜெகதீஷ் மற்றும் அவர்களது உறவினர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.