தூத்துக்குடி, கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு, மாவட்ட தலைவர் பால்ராஜ்பட்டுக்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் பன்னீர்செல்வம் கோரிக்கையை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ரசல் கலந்து கொண்டு பேசினார்.
கோரிக்கைகள்போராட்டத்தில், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களுக்கு, பிரதிமாதம் 7–ந் தேதி சம்பள பட்டுவாடா செய்யப்பட வேண்டும். ஒப்பந்தக்காரர் சம்பள பட்டியல் மற்றும் அடையாள அட்டை வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட அலுவலக கிளை செயலாளர் ஜெயராஜ், கிளை செயலாளர்கள் அரிராமச்சந்திரன், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டிஇதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில், தர்ணா போராட்டம் நேற்று மாலையில் நடந்தது. கிளை தலைவர்கள் முத்துராமலிங்கம், ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பு செயலாளர் பரமசிவன், கிளை பொருளாளர் திருவட்டபோத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயமுருகன் கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், பாலசிங், மீனாட்சிசுந்தரம், பாலகிருஷ்ணன், முத்துசாமி, கேசவன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.