தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு பரிசு
தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து போலீஸ் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று காலை டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து போலீஸ் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று காலை டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தணகுமார் தலைமை தாங்கினார். சப்–இன்ஸ்பெக்டர்கள் மயிலேறும்பெருமாள், பூவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கலந்து கொண்டு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களை பாராட்டி இனிப்பு மற்றும் பேனா வழங்கினார். தொடர்ந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் போலீசார் வினியோகம் செய்தனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி சென்றவர்களை போலீசார் எச்சரித்தும், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியும் அனுப்பி வைத்தனர்.