தூத்துக்குடி மாநகராட்சியில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க காங்கிரஸ் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் டி.சேகர், ஆர்.ராதாகிருஷ்ணன், பி.செந்தூர்பாண்டி, பி.தனபால்ராஜ், ஜோபாய், ஏ.முடிசூடி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் வரை தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க கூடாது,
விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வார்டு தலைவர்கள் மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.