சிவசேனாவும், காங்கிரசும் காதலர் தின பரிசாக வார்டுகளை பரிமாறி கொண்டனர் மந்திரி வினோத் தாவ்டே கிண்டல்

மும்பை மாநகராட்சி தேர்தல் வருகிற 21–ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்

Update: 2017-02-14 22:49 GMT

மும்பை,

மும்பை மாநகராட்சி தேர்தல் வருகிற 21–ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவும், காங்கிரசும் காதலர் தின பரிசாக வார்டுகளை தங்களுக்கு இடையே பரிமாறி கொண்டதாக சூசகமாக குறிப்பிட்டார்.

அதாவது, காங்கிரஸ் போட்டியிடும் 40 வார்டுகளில் சிவசேனாவின் பிரசாரம் தீவிரமாக இருக்காது என்றும், அதேபோல் சிவசேனா போட்டியிடும் 10 வார்டுகளில் காங்கிரசின் பிரசாரம் ஜொலிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், 5 ஆண்டுகளில் சிவசேனா கவுன்சிலர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகள்