வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகையை பறித்த கூரியர் ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தானே செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகையை பறித்த கூரியர் ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தானே செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2017-02-14 22:02 GMT

தானே,

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகையை பறித்த கூரியர் ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தானே செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கூரியர் ஊழியர்

தானே மான்பாடா பகுதியை சேர்ந்த பெண் சுஷ்மா நாயர் (வயது65). இவர் சுபாராம் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த 2015–ம் ஆண்டு செப்டம்பர் 14–ந் தேதியன்று வீட்டில் சுஷ்மா தனியாக இருந்தார்.

அப்போது அவருக்கு நன்கு தெரிந்த கூரியர் ஊழியர் கிருஷ்ணா (20) என்பவர் சுஷ்மா நாயர் வீட்டிற்கு வந்தார்.

அவர் சுஷ்மா நாயரிடம் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டார். இதையடுத்து தண்ணீர் எடுக்க சென்ற சுஷ்மா நாயரை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற கிருஷ்ணா திடீரென அவரை தாக்கினர். இதில் சுஷ்மா நாயர் படுகாயம் அடைந்து மயக்கமானார். பின்னர் வீட்டில் இருந்த ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் நகைகளை திருடிக்கொண்டு கிருஷ்ணா அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

நகைபறிப்பு

இதில் காயம் அடைந்த சுஷ்மா நாயர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் குணமானார். மான்பாடா போலீசார் கிருஷ்ணாவை கைது செய்து தானே செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, கிருஷ்ணா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றவாளி கிருஷ்ணாவுக்கு நீதிபதி 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்