சசிகலாவுக்கு சிறை தண்டனை: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தனர்

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு சிறை தண்டனை விதித்தது.

Update: 2017-02-14 22:30 GMT

மதுரை,

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று சிறை தண்டனை விதித்ததால், அவர் முதல்–அமைச்சராக முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அவர் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. மதுரையில் முன்னாள் தெற்குமண்டல தலைவர் சாலைமுத்து தலைமையில் 50–க்கும் மேற்பட்டவர்கள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். அவர்கள் சசிகலாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி அறிந்ததும் உற்சாகம் அடைந்தனர்.

அதையொட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான மாநகர அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், வட்ட செயலாளர் கருப்புத்துரை, திருப்பரங்குன்றம் பகுதி துணை செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன் தலைமையில் 20–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை கட்டபொம்மன் சிலை அருகே வந்தனர். அவர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்கள் இனிப்பும் வழங்கினர்.

மேலும் செய்திகள்