சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை: நாகர்கோவிலில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதையொட்டி நாகர்கோவிலில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
நாகர்கோவில்,
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்த நீதிபதி குன்காவின் தீர்ப்பு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அவரை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு விடுவித்துள்ளது.
சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டதையொட்டி குமரி மாவட்டத்தில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் நேற்று பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா முன் மாவட்ட பால்வள தலைவரும், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளருமான அசோகன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ், சாம்ராஜ், பூங்கா கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கார்மல்நகர் தனிஷ் தலைமையில் செட்டிகுளம், புன்னைநகர், ராமன்புதூர் ஆகிய இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதைப்போன்று வடசேரி, கணேசபுரம் ஆகிய இடங்களிலும் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்தனர்.
தி.மு.க.வினர்...
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்து வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டதால் தி.மு.க. சார்பிலும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதைப்போல் ஜெ. தீபா பேரவை சார்பிலும் வெட்டூர்ணிமடத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டது.