திருச்சியில் இருந்து பள்ளி மாணவர்கள் சென்னைக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை எதிரொலியாக திருச்சியில் இருந்து சென்னைக்கு பள்ளி மாணவ-மாணவிகள் விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதிகாரிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பட்டு,
மாணவ-மாணவிகள்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் சசிகலா தரப்பை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ராஜ ராஜ சோழன் மற்றும் நிர்வாகிகள் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்வதாகவும், அங்கிருந்து ஆம்னி பஸ் மூலம் திருப்பி வர ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.
இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற 104 மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக 26 ஆசிரியர்கள் என மொத்தம் 130 பேர் சென்னை செல்வதற்காக திருச்சி விமானநிலையத்திற்கு அ.தி.மு.க. பிரமுகர் ராஜ ராஜ சோழன் மற்றும் நிர்வாகிகள் அழைத்து வந்திருந்தனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்னை செல்ல டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர்.
பயணிக்க அனுமதி மறுப்பு
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் சென்னையில் சூழ்நிலை சரியில்லாததால் குழந்தைகளை விமானத்தில் சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டாம் என விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் அ.தி.மு.க.வினருக்கும், விமானநிலைய அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்பதிவு செய்தப்படி பயணம் செய்வோம், தடுத்து நிறுத்தக்கூடாது என வாதிட்டனர். அதற்கு தற்போதைய சூழ்நிலையை காரணம் காட்டி அனுமதி மறுத்தனர். மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும் விமானநிலைய அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் விமானநிலைய போலீசார் விரைந்து வந்தனர்.
டிக்கெட் கட்டணம்
அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நிலமையை சுட்டிக்காட்டி திரும்பி செல்ல வலியுறுத்தினர். அதற்கு சென்னை மெரினா கடற்கரைக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்று ஜெயலலிதா நினைவிடம், அண்ணா நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடம் ஆகியவற்றை சுற்றி காண்பித்து திருப்பி அழைத்துவரப்படும் என அ.தி.மு.க.வினர் கூறினர். ஆனால் விமானநிலைய அதிகாரிகள் மறுத்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். டிக்கெட் கட்டண தொகை திருப்பி வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.