கரூர் காமாட்சியம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

கரூர் காமாட்சியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2017-02-14 21:37 GMT
கரூர்,

கோவில் திருவிழா

கரூர் காமாட்சியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 13-ந் தேதி கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அன்று இரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று கோவிலில் தீமிதி விழா நடந்தது. இதையொட்டி காமாட்சியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பு குழி தோண்டப்பட்டு தீ மூட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

கரகம்

இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை வீதிஉலா நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு இன்னிசை கச்சேரி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்