நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலஅளவை பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நிலஅளவை பயிற்சியை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.
நாமக்கல்,
பயிற்சி
நாமக்கல தாசில்தார் அலுவலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நில அளவை குறித்த பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமை கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–
வருவாய்த் துறையின் மிக முக்கியமான பணி நில அளவை பணியாகும். நில அளவை கணக்குகள் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த நில அளவை பயிற்சிகள் கிராம நிர்வாக அலுவலகப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும் மலைப்பகுதிகளில் எவ்வாறு நில அளவை மேற்கொள்வது என்பது குறித்தும் இங்கே பயிற்சி வழங்கப்படுகின்றது.
நல்ல முறையில்
புதியதாக நியமிக்கப்பட்டு உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சியினை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நில அளவையில் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை தெளிவாக கேட்டு அறிந்து கொண்டு உங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் உதவி கலெக்டர் ராஜசேகரன், உதவி இயக்குனர் (நில அளவை) சக்திவேல், தாசில்தார் சுகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.