அடையார், திருவான்மியூர் பகுதிகளில் 4 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது
சென்னை குடிநீர் வாரியத்தின் மக்கள் தொடர்பு மேலாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அடையார், பெசன்ட் நகர், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, கிழக்கு கடற்கரை சாலை (நீலாங்கரை-ஈஞ்சம்பாக்கம்), பழைய மாமல்லபுரம் சாலை (ஒக்கியம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி) போன்ற பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கு குடிநீர் வராது. எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.