மின்சார ரெயிலில் சென்ற போது மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலகுருவம்மாள்(வயது 70).
ராயபுரம்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலகுருவம்மாள்(வயது 70). இவர் நேற்று முன்தினம் சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
பின்னர் அவர் வீட்டிற்கு செல்வதற்காக பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் ஏறினார். அத்திபேடு ரெயில் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவர் அணிந்திருந்த 6 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர் யாரோ அவரிடம் இருந்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து பாலகுருவம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.