குடிசை, தொழிற்சாலையில் தீ விபத்து

குடிசை, தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2017-02-14 21:15 GMT
திருவள்ளூர்,

குடிசை, தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து

பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் குலசேகரன் (வயது 52). கூலித்தொழிலாளி. குடிசையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குலசேகரன் வேலையின் காரணமாக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கின்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு இருந்த பீரோ, கட்டில், துணிமணிகள், போன்றவை தீயில் கருகியது. இதை பார்த்த அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்கள்.

தொழிற்சாலை

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான வாகன கட்டுமான தொழிற்சாலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த தொழிற்சாலையில் பெயிண்டு சேமிப்பு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு அதிகாரி காளிதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பெயிண்டு தீயில் எரிந்து நாசம் ஆனது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்