தூத்துக்குடியில் லாரி– மோட்டார் சைக்கிள் மோதல்; ஏ.சி. மெக்கானிக் பலி உறவினர் படுகாயம்

தூத்துக்குடியில் லாரி– மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ஏ.சி. மெக்கானிக் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-02-14 20:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் லாரி– மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ஏ.சி. மெக்கானிக் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

விபத்து

கோவை மாவட்டம் வீரகேரளம் சுண்டபாளையத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 45), ஏ.சி. மெக்கானிக். இவர் தூத்துக்குடியில் உள்ள தன்னுடைய உறவினரான கே.சண்முகபுரத்தை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் தங்கி அவருடன் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும் தாளமுத்துநகர் சகாயமாதா பட்டினம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏ.சி.யில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து விட்டு, 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜேந்திரன் ஓட்டினார்.

லாரி மோதியது

மோட்டார் சைக்கிள் வி.வி.டி. பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தண்ணீர் லாரி, ராஜேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துராஜ் பலியானார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், பலியான முத்துராஜ் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ராஜேந்திரன், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்