அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி
தண்டராம்பட்டு தாலுகா அகரம்பள்ளிப்பட்டில் பொதுமககள் வசிககும் பகுதி மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக சீமை கருவேல மரங்கள் ஏராளமாக காணப்பட்டன. இந்த நிலையில் அகரம்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து அகரம்பள்ளிப்பட்டு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர
வாணாபுரம்,
தண்டராம்பட்டு தாலுகா அகரம்பள்ளிப்பட்டில் பொதுமககள் வசிககும் பகுதி மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக சீமை கருவேல மரங்கள் ஏராளமாக காணப்பட்டன.
இந்த நிலையில் அகரம்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து அகரம்பள்ளிப்பட்டு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் பொதுமக்கள் செல்லும் பகுதிகளில் இடையூறாக காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்ற முடிவு செய்தனர்.
அதன்படி 30–க்கும் மேற்பட்டோர் அகரம்பள்ளிப்பட்டில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் அருகே காணப்பட்ட சீமை கருவேல மரங்களை வெட்டும் பணியில் நேற்று ஈடுபட்டனர். சிலர் அப்பகுதியில் உள்ள பாம்பாற்றின் கரையோரத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். அகரம்பள்ளிப்பட்டு மற்றும் பாம்பாற்று பகுதியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் அனைத்தையும் வெட்டி அகற்றும் பணியை பொதுமக்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.