திருவண்ணாமலை, போளூரில் அ.தி.மு.க.–தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தண்டனை வழங்கி சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்று திருவண்ணாமலை, போளூரில் அ.தி.மு.க.–தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புள வழங்கினார்கள். சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்ப

Update: 2017-02-14 22:45 GMT

திருவண்ணாமலை,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தண்டனை வழங்கி சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்று திருவண்ணாமலை, போளூரில் அ.தி.மு.க.–தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புள வழங்கினார்கள்.

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சிறைத்தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வரவேற்று திருவண்ணாமலை நகர தி.மு.க. சார்பில் காந்தி சிலை அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நகரமன்ற முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதில் நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் செல்வம், மாவட்ட அமைப்பாளர் காலேஜ் ரவி, பொதுக்குழு உறுப்பினர் ப்ரியா விஜயரங்கன், குட்டி புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தீர்ப்பை வரவேற்று திருவண்ணாமலை–வேட்டவலம் ரோடு சந்திப்பில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் பிரதிநிதி டிஸ்கோ குணசேகரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார்கள். இதில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வேணுகோபால், வட்ட பிரதிநிதிகள் கோபி, நகர மாணவரணி செயலாளர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போளூர்

போளூரில் தீபா பேரவை சார்பில் சுகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் போளூர் பஸ்நிலையம் முன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள். இதில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் போளூரை சுற்றியுள்ள பல கிராமங்களில் தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

மேலும் செய்திகள்