விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் இளம்பெண் கைது
மும்பை விமான நிலையத்தில் இருவேறு சம்பவங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல்
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் இருவேறு சம்பவங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக இளம்பெண் ஒருவர் கைதானார்.
தங்கம் கடத்திய இளம்பெண்
துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய இளம்பெண் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று பெண் அதிகாரிகளை வைத்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் இளம்பெண் தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 14 தங்கக்கட்டிகளை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் மும்பையை சேர்ந்த பத்மீத் ரசீனா(வயது22) என்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள் 1 கிலோ 685 கிராம் எடை கொண்டதாக இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.49 லட்சத்து 51 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருக்கைக்கு அடியில்...
மற்றொரு சம்பவத்தில், துபாயில் இருந்து வந்த இன்னொரு விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு இருக்கைக்கு அடியில் 20 தங்கக்கட்டிகள் மற்றும் ஒரு தங்கச்சங்கிலி மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். அவை 2 கிலோ 362 கிராம் எடை கொண்டதாக இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.71 லட்சத்து 66 ஆயிரம் என்பது தெரியவந்தது.
இந்த தங்கக்கட்டிகளை கடத்தி வந்தவர் யார்? இந்த இருக்கையில் இருந்த பயணி யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி 2 சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 21 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.